பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றால்... ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்
பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த விடயம் ஜேர்மனிக்கு அச்சத்தை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்
பிரான்சில் முதல் சுற்றுத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், அக்கட்சி வெற்றி பெறுமானால், அந்த வெற்றி பிரான்சுடனான உறவை பாதிக்கலாம் என்ற அச்சம் ஜேர்மனிக்கு அச்சம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் வலதுசாரிக் கட்சியான National Rally கட்சி, தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும், அதனால் பிரான்சில் அக்கட்சி புதிய ஆட்சி அமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அந்த விடயம் ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தானும் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும் தொடர்ந்து மொபைல் வாயிலாக தொடர்பிலிருப்பதாகவும், தான் மிகவும் நேசிக்கும் பிரெஞ்சு மக்கள், பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதில் வெற்றியடைவார்கள் என்னும் நம்பிக்கையுடன் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறுமானால், பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவு சீர்கெட்டுவிடும் என்றும், அதன் தாக்கம் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதையும் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |