இந்திய அணிக்கு எதிராக 8 சிக்ஸர்கள் விளாசி முதல் சதமடித்த வீரர்! படைத்த மிரட்டல் சாதனை
சதம் விளாசிய ரோஸோவ் 21 போட்டிகளில் 558 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
டி காக் 72 போட்டிகளில் 2000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளார்
தென் ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோஸோவ் இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் மிரட்டல் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இண்டூரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் குவித்தது.
Photo - South Africa Cricket
பின்னர் ஆடிய இந்திய அணி 178 ஓட்டங்களே எடுத்ததால் தோல்வியுற்றது. தென் ஆப்பிரிக்க வீரர் ரோஸோவ் இந்தப் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்ஸர்களை பறக்க விட்ட அவர், 48 பந்துகளில் சதம் விளாசினார்.
இது அவருக்கு முதல் சர்வதேச டி20 சதம் ஆகும். மொத்தம் அவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விரட்டினார். டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய 5வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற மிரட்டல் சாதனையை ரோஸோவ் படைத்தார்.
[
அவரைத் தொடர்ந்து மேலும் சில தென் ஆப்பிரிக்க வீரர்களும் சாதனை படைத்தனர். விக்கெட் கீப்பர் குவிண்டான் டி காக் 68 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், இந்திய அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் (4) அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார்.
அதேபோல் 2000 ஓட்டங்கள் மைல்கல்லை கடந்த 2வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மற்றோரு வீரரான லுங்கி இங்கிடி 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய 6வது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
கேசவ் மகாராஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 200 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.