ஹரி தன்னை மயக்கியதாக கூறியுள்ள பெண்: முகம் சுழிக்கும் ஒரு புகைப்படமும் காரணமும்...
தனது பிறந்தநாளின்போது தன்னை ஹரி மயக்கிவிட்டதாக கூறியுள்ள பெண்ணின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரே முகம் சுழிக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஹரி தன்னிடம்தான் தன் கன்னித்தன்மையை இழந்ததாக கூறியுள்ள பெண்
இளவரசர் ஹரி, தான் தன்னை விட மூத்த ஒரு பெண்ணிடம் தன் கன்னித்தன்மையை இழந்ததாக தனது 'Spare’ புத்தகத்தில் எழுதியுள்ள விடயம் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கிவருகிறது.
அந்தப் பெண் நான்தான் என்று ஊடகங்களுக்கு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்ணின் பெயர் சாஷா (Sasha Walpole).
முகம் சுழிக்கும் ஒரு புகைப்படம்
அந்த பேட்டியில் சாஷா மற்றொரு முக்கிய விடயத்தையும் கூறியுள்ளார். அதாவது, தானும் இளவரசர் ஹரியும் பாலுறவுகொண்டதாகக் சாஷா கூறியுள்ள நிலையில், ஹரி வேறு சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் ஹரியைச் சுற்றி சாஷா உட்பட மூன்று இளம்பெண்கள் நிற்க, அதில் ஒரு பெண்ணை ஹரி முத்தமிட, அதைக் கண்டு சாஷா முகம் சுழிப்பதைக் காணலாம்.
உண்மையில் ஹரி அந்தப் பெண்ணை முத்தமிடவில்லை என்கிறார் சாஷா. அதாவது, அந்தப் பெண் ஒரு கேக் சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். அதை ஹரி பறிக்க முயல, அந்தப் பெண் விளையாட்டாக அதைக் கொடுக்க மறுக்க, அவரது கன்னத்தில் ஒட்டியிருந்த கேக்கை ஹரி நக்கி எடுத்தாராம். அதனால்தான் தான் அந்தப் புகைப்படத்தில் முகம் சுழித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் சாஷா.
யார் அந்தப் பெண்?
அந்தப் பெண்ணின் பெயர் எம்மா (Emma Lippiatt). ஒரு கட்டத்தில் எம்மாவையும் ஹரியையும் இணைத்து பேசப்பட்டுள்ளது. எம்மா தனது முதல் காதலி என ஹரியும் கூறியுள்ளார்.
ஒரு நாள் தங்களில் சிலர் ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும்போது, ஹரி சிலரை முத்தமிட்டாராம். ஆனால், அவர் எம்மாவை விரும்பியதால், தான் ஹரியின் முத்தத்தைத் தவிர்த்துவிட்டதாக கூறியுள்ளார் சாஷா.
ஆனால், ஹரி எம்மாவை விரும்புவது தெரிந்தும் ஹரியுடன் பாலுறவுகொண்டதாகக் கூறியுள்ள சாஷா, அது மதுபோதையில் நிகழ்ந்த சின்னவிடயம் என கூறியிருப்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.