குட்டி இளவரசி சார்லட்டின் அறையில் ஆவிகள்... பாதுகாக்கும் டயானா: வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் மகளான குட்டி இளவரசி சார்லட்டின் அறையில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த இளவரசி டயானாதான் சார்லட்டை பாதுகாக்கிறாராம்.
ஆவிகளுடன் பேசும் பிரபலமான Jasmine Anderson என்பவர், இளவரசர் வில்லியம் தனது குடும்பத்துடன் வாழும் வீடு அவ்வளவு சரி இல்லை என்று கூறியுள்ளார்.
குறிப்பாக குட்டி இளவரசி சார்லட் வாழும் அறையில் ஆவிகள் நடமாட்டம் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இளவரசி சார்லட் மீது தனிக்கவனம் செலுத்த அவருடன் ஒருவர் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் Jasmine. அந்த ஒருவர், இளவரசர் வில்லியமுடைய தாயும் சார்லட்டின் பாட்டியுமாகிய இளவரசி டயானா என்கிறார் அவர்.
இளவரசி டயானா எப்போதுமே பிள்ளைகள் மீது அதிக அக்கறை கொண்டவர் என்று கூறும் Jasmine, குறிப்பாக, அவர் சார்லட்டை பாதுகாப்பதாக தெரிவித்துள்ளார்.