சிக்ஸர் அடித்து கண்ணாடியை நொறுக்கிய ரிங்கு சிங்.., 'SORRY' சொல்லி கூலாக பதில்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 -வது டி20 போட்டியின் போது ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் மைதானத்தில் உள்ள கண்ணாடியை நொறுக்கியது.
IND Vs SA T20i Series 2023
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் 2 -வது டி20 போட்டியானது ஜியார்ஜ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் விளையாடிய திலக் வர்மா 29 ரன்னும், சூரிய குமார் யாதவ் 56 ரன்னும், ரிங்கு சிங்க் 68 ரன்னும், ஜடேஜா 19 ரன்னும் அடித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மழையின் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கபட்டு 152 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றியடைந்தது.
That Rinku SIX just landed in the media box. pic.twitter.com/fwAXKUUvD1
— Rajal Arora (@RajalArora) December 12, 2023
ரிங்கு சிங் (Rinku Singh)
இந்த போட்டியின் போது விளையாடிய ரிங்கு சிங் (Rinku Singh) அடித்த சிக்ஸர் ஊடகத்தினர் பணியில் இருக்கும் அறையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. இதுதொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Maiden international FIFTY ?
— BCCI (@BCCI) December 13, 2023
Chat with captain @surya_14kumar ?
... and that glass-breaking SIX ?@rinkusingh235 sums up his thoughts post the 2⃣nd #SAvIND T20I ?? #TeamIndia pic.twitter.com/Ee8GY7eObW
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரிங்கு சிங், "நான் சிக்ஸர் அடித்து கண்ணாடியை உடைத்தது எனக்குத் தெரியாது. அதற்காக மன்னிக்கவும்" என்று கூலாக பதில் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |