தோனியின் சாதனையை முறியடித்த ரிங்கு சிங் - குவியும் பாராட்டு
ஐபிஎல் வரலாற்றில் 20-வது ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று தோனியின் சாதனையை ரிங்கு சிங் படைத்துள்ளார்.
சிக்சர்களை பறக்க விட்ட ரிங்கு சிங்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், முதலில் குஜராத் அணி துப்பாட்டம் செய்தது. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இப்போட்டியில், வெங்கடேஷ் ஐயர், நிதிஸ் ராணா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.
கடைசி ஓவரில் 29 ரன்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டிருந்தது. அப்போது, ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெற செய்தார். ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்து அசத்தியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
தோனியின் சாதனையை முறியடித்த ரிங்கு சிங்
கொல்கத்தா வீரர் ரிங்கு சிங், குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில், தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமானார்.
இதனையடுத்து, ஐபிஎல் வரலாற்றில் 20-வது ஓவரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் (30) என்ற சாதனையை படைத்துள்ளார் ரிங்கு சிங். இதற்கு முன்பாக, 2019ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 20-வது ஓவரில் தோனி 26 ஓட்டங்கள் அடித்ததே. அந்த ஓவரில் சாதனையாக இருந்தது.
Ringu Singh??? pic.twitter.com/IPkfATJf2C
— Radha krishnan (@radhakrishna07) April 9, 2023