சிக்சர்களை பறக்க விட்டு துவம்சம் செய்த ரிங்கு சிங் - புகழாரம் சூட்டிய ஐசிசி
சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய ரிங்கு சிங்கிற்கு ஐ.சி.சி புகழாரம் சூட்டியுள்ளது.
சிக்சர்களை பறக்க விட்ட ரிங்கு சிங்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், முதலில் குஜராத் அணி துப்பாட்டம் செய்தது. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இப்போட்டியில், வெங்கடேஷ் ஐயர், நிதிஸ் ராணா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.
கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டிருந்தது. அப்போது, ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெற செய்தார். ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்து அசத்தியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஐ.சி.சி. புகழாரம் -
இந்நிலையில், ரிங்கு சிங்குக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) புகழாரம் சூட்டி இருக்கிறது.
அன்று கார்லஸ் பிராத்வெயிட்.... இன்று ரிங்கு சிங்.... என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படத்தையும் பகிர்ந்து இவர்களது பெயர் நிலைத்து நிற்கும் என்று ஐ.சி.சி. பதிவிட்டுள்ளது.
2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி சுற்றில் வெஸ்ட் இண்டீசின் கார்லஸ் பிராத்வெய்ட் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர் அடித்து வெற்றிக்கு வித்திட்டிருந்தார். அதைத் தான் ஐ.சி.சி. இவ்வாறு ஒப்பிட்டிருக்கிறது.
Rinku Singh ? Carlos Brathwaite
— ICC (@ICC) April 9, 2023
“Remember the name!”#IPL2023 #T20WorldCup pic.twitter.com/AHoEs3BfXx