83 ரன் விளாசிய ரிங்கு சிங்: டை ஆன போட்டி..சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி
ஐபிஎல் 2026 தொடர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸை வீழ்த்தியது.
ரிங்கு சிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 155 ஓட்டங்கள் எடுத்தது. ரிங்கு சிங் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 51 பந்துகளில் 83 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
மிரட்டலாக பந்துவீசிய மொஹ்சின் கான் 23 ஓட்டங்களே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சூப்பர் ஓவரில் வெற்றி
பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியும் 20 ஓவர்களில் 155 ஓட்டங்கள் எடுத்தது. ரிஷாப் பண்ட் 42 ஓட்டங்கள் எடுத்தார்.

போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. முதலில் ஆடிய லக்னோ அணி ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அடுத்து ஆடிய கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |