கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் தேவை..5 சிக்ஸர்கள் விளாசி வெற்றி பெற வைத்த வீரர்..சிக்ஸர் மழை வீடியோ
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மிரட்டிய தமிழக வீரர்கள்
அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் ஆடிய குஜராத் அணி விஜய் சங்கர் (63), சாய் சுதர்சன் (53) ஆகியோரின் அரைசதம் மூலம் 204 ஓட்டங்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில், சிக்ஸர்களை பறக்கவிட்ட வெங்கடேஷ் அய்யர் 40 பந்துகளில் 83 ஓட்டங்களும், கேப்டன் நித்திஷ் ராணா 29 பந்துகளில் 45 ஓட்டங்களும் விளாசினர்.
Watching this on L➅➅➅➅➅P... and we still can't believe what we just witnessed! ?pic.twitter.com/1tyryjm47W
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023
ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட்
ஆனால் ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஓவரில் ரசல், நரைன் மற்றும் ஷரத்துல் தாக்கூர் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் மறுபுறம் ரிங்கு சிங் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் குஜராத் அணி வெற்றி பெறும் சாத்தியம் அதிகமாக இருந்தது.
First 2️⃣0️⃣0️⃣+ total for us in the #TATAIPL! ?
— Gujarat Titans (@gujarat_titans) April 9, 2023
On to our bowlers now to defend. ?#AavaDe #GTvKKR pic.twitter.com/bpB5fVR5A9
வெற்றியை தேடித்தந்த ரிங்கு சிங்
அப்போது ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கிய ரிங்கு சிங், அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் இருந்து 5 சிக்ஸர்களை விளாசினார். இதனால் யாரும் எதிர்பாராத வகையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 48 ஓட்டங்கள் விளாசினார். குஜராத் தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
1,6,6,6,6,6! Lord Rinku ?#GTvKKR | #AmiKKR | #TATAIPL 2023 pic.twitter.com/eW87VQUtHe
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023
Careful... he's a superhero! pic.twitter.com/QTYhoblvGb
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2023