போர்க்களமான பிரித்தானிய நகரம்... கலவரக்காரர்களால் தப்பியோடிய பொலிசார்: பேருந்துக்கு தீ வைப்பு
பிரித்தானியாவின் லீட்ஸ் நகரம் போர்க்களமாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Luxor Street பகுதியில்
பொலிஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்தக் கலவரக்க்காரர்களால் பொலிசார் சம்பவயிடத்தில் இருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Harehills பகுதி மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5 மணியளவில் Luxor Street பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மட்டுமின்றி, சமூக ஊடகத்தில் கவனம் ஈர்த்த காணொளி ஒன்றில், நூறுக்கும் மேற்பட்டவர்கள் தெருவில் காணப்பட்டனர். மட்டுமின்றி, இன்னொரு காணொளியில் பொலிஸ் கார் ஒன்று தாக்கப்படுவதும், கவிழ்க்கப்படுவதும் பதிவாகியுள்ளது.
மற்றொரு காணொளியில் டசின் கணக்கானவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு ஸ்கூட்டரை எடுத்து ஒரு பொலிஸ் கார் மீது வீசுகிறார், பலர் பொலிஸ் கார் மீது தாக்குகின்றனர்.
சம்பவத்திற்கு காரணம்
இந்த நிலையில் சம்பவயிடத்திற்கு மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காயமடைந்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, Gipton மற்றும் Harehills பகுதியின் கவுன்சிலர் சல்மா ஆரிப் விடுத்த கோரிக்கையில், மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து தற்போது வெளியே வரவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் ஒருவராக எவரேனும் சிக்கியிருந்தால் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் பொலிஸ் தரப்பில் அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்திற்கு காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |