பிரித்தானியாவை உலுக்கிய கலவரங்கள்: மொத்தமாக 100 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிப்பு
பிரித்தானியா முழுவதும் கலவரங்களில் ஈடுபட்டு கைதான தீவிர வலதுசாரிகள் பலருக்கும் மொத்தமாக 100 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 110 ஆண்டுகள்
கலவரத்தின் போது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய நபருக்கு நேற்று மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுவரை 50 பேர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 110 ஆண்டுகள் என தகவல் வெளியாகியுள்ளது.
26 வயதான Connor Whiteley என்பவருக்கு தண்டனையை அறிவித்த நீதிபதி, கலவரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரையான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
Connor Whiteley இனவாத, வெறுப்புமிக்க வன்முறையை முன்னெடுத்துள்ளார் என்றே நீதிமன்ற விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர் மக்களுக்கான ஹொட்டலின் முன்பு வன்முறையில் ஈடுபட்ட Connor Whiteley, பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்.
இதேப்போன்று, மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயது Trevor Lloyd என்பவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரும் புலம்பெயர் மக்கள் தங்கியிருந்த ஹொட்டல் முன்பு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கைதானார்.
பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பெண்
பிள்ளைகளுக்கு இரவு உணவு வாங்கச் சென்ற இவர், கலவரக்காரர்களுடன் இணைந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஊனமுற்ற்ற 60 வயதான நபர் ஒருவர் தமக்கு 2 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அறிந்து கண்கலங்கியுள்ளார்.
இவரும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாலையே கைது செய்யப்பட்டார். பொலிசார் மீது கற்களால் தாக்கிய 34 வயது Dominic Capaldi என்பவருக்கு 34 மாதங்கள் சிறை தண்டனை விதிகப்பட்டுள்ளது.
இதனிடையே, மசூதிகளை தகர்க்க வேண்டும் என பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட 53 வயது பெண் ஒருவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 50 பேர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காவலில் உள்ளனர். மிக விரைவில் அவர்களுக்கும் தண்டனை அறிவிக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |