யுத்தகளமாக மாறிய கொழும்பு ! கலவரத்தில்17 பேர் காயம்.. நாடு முழுவதும் ஊடரங்கு சட்டம் அமுல்
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் காலி முகத்திடலில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராடடம் நடத்தும் நபர்களுக்கு எதிராக வன்முறையை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 17 பேர் காயமடைந்தனர் என கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் அழுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளார் தகவல் வெளியாகியுள்ளது.