கடைகள் சூறை... பற்றியெரியும் நகரங்கள்: தீவிர வலதுசாரிகளால் போர்க்களமாகும் பிரித்தானியா
சிறார்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால் பிரித்தானியா போர்க்களமாக மாறியுள்ளது.
11 வயதுக்குட்பட்ட சிறார்களும்
இந்த வார இறுதியில் இதுவரை 57 வன்முறையாளர்கள் கைதாகியுள்ளனர். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் லிவர்பூல், பிளாக்பூல், மான்செஸ்டர், பெல்ஃபாஸ்ட், ஹல் மற்றும் பிற இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து கைதானவர்களில் 11 வயதுக்குட்பட்ட சிறார்களும் அடங்குவர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இந்த வன்முறை சம்பவங்களில் பொலிசாரும் காயமடைந்துள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமையும் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களுக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால், வன்முறையில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான நடவடிக்கையை பொலிசார் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றே பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே ஞாயிறன்று தீவிர வலதுசாரி குழுவான Enough is Enough ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. Bolton Town Hall, Lancaster Town Hall, Middlesbrough Cenotaph, Weymouth Seafront Clock, மற்றும் Rotherham பகுதிகளை அந்த குழு தெரிவு செய்துள்ளது.
வன்முறைக்கு மன்னிப்பு இல்லை
இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கருத்து சுதந்திரம் மற்றும் வன்முறை என்பது இருவேறு விடயங்கள் என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு வன்முறைக்கும் மன்னிப்பு இல்லை என்பதை குறிப்பிட்ட பிரதமர் ஸ்டார்மர், நமது தெருக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க காவல்துறைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பல பகுதிகளில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்களும் தீ வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் கெஞ்சியும் வன்முறையாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |