இளவரசர் ஹரியின் அச்சம்... உறுதி செய்திருக்கும் பிரித்தானியாவின் தற்போதைய நிலை
இளவரசர் ஹரி - மேகன் தம்பதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளது சரி என்பதை தற்போதைய கலவரங்கள் நிரூபிப்பதாக அரச குடும்பத்து நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர்.
மனைவியின் உயிருக்கு ஆபத்து
ஜூலை 29ம் திகதி மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை அடுத்து நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ளன. இதனால் கடந்த பல நாட்களாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் அரச குடும்பத்து நிபுணரான Daniela Elser என்பவர் தெரிவிக்கையில், இளவரசர் ஹரி வெளிநாடு சென்று குடியேறியுள்ளது உண்மையில் சரியான முடிவு என்றார்.
2020 பிப்ரவரி மாதம் தங்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதை குறிப்பிட்டு இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினர். தமது மனைவியின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற கவலை தமக்கு இருப்பதாக ஹரி முன்னர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே பிரித்தானியாவில் இருந்து வெளியேறுவதாகவும் ஹரி குறிப்பிட்டிருந்தார். தமது குடும்பத்தினருக்கு தற்போது ஆபத்தான ஒரு நாடாக பிரித்தானியா உள்ளது என்றே ஹரி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமது மனைவி மேகன் அரச குடும்பத்தில் கலப்பு இன உறுப்பினராக இருப்பதால் இந்த நிலை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். ஒரு தவறான முடிவு தமது வாழ்க்கையை தலைகீழாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ள ஹரி,
ஹரி எடுத்துள்ள முடிவு சரி
இதனாலையே தமது மனைவி மேகனை பிரித்தானியாவுக்கு அழைத்துவர தாம் தயங்குவதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியது முதல் ஹரியும் மேகனும் பிரித்தானிய அரசாங்கத்தின் காவல்துறை பாதுகாப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது தான் ஹரி தம்பதியை நாட்டைவிட்டு வெளியேறும் முடிவுக்கு தூண்டியதாகவும் கூறுகின்றனர். தற்போது ஹரி எடுத்துள்ள முடிவு உண்மையில் சரி என நிரூபணமாகியுள்ளது என்றே Daniela Elser சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழலில் பிரித்தானியா பாதுகாப்பான இடமாக இல்லை என்றும் அது அரச குடும்பத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எல்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மூடிவைக்கப்பட்டிருந்த வெறுப்பும் இனவாதமும் தற்போது வெளிப்படையாக மக்கள் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |