ரிஷப் பண்ட்டிற்கு ஒரு கோடி அபராதம்!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணித்தலைவர் ரிஷப் பண்ட்டிற்கு ஒரு கோடியே 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நோ-பால் விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு சாரார் அதனை நோ-பால் என்றும், மற்றோரு சாரார் நோ-பால் இல்லை என்றும் விவாதித்து வருகின்றனர்.
நோ-பால் கொடுக்காததால் ஆட்டத்தை நிறுத்துமாறு ரிஷப் பண்ட் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர் செலுத்த வேண்டும். ஐபிஎல்-லின் நடத்தை விதியான 2.7-யில் லெவல் 2 குற்றத்தை பண்ட் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மற்றோரு டெல்லி அணி வீரர் ஷர்துல் தாக்கூர், ஐபிஎல்-லின் நடத்தை விதியான 2.8-யில் லெவல் 2 குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவுக்கு 100 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு போட்டி தடையும் விதிக்கப்பட்டுள்ளது.