எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனை முறியடிப்பு: வரலாறு படைத்த ரிஷாப் பண்ட்
Rishabh breaks ms dhoni record in test: இந்திய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் நீண்ட கால சாதனையை ரிஷாப் பண்ட் முறியடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அல்லது நடுநிலையான மைதானங்களில் விக்கெட் கீப்பராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரிஷாப் பண்ட் படைத்துள்ளார்.
ரிஷாப் பண்ட்
கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் விக்கெட் கீப்பராக 2,501 ஓட்டங்கள் குவித்து பண்ட் வரலாறு படைத்தார். வெளிநாடுகள் அல்லது நடுநிலையான மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த விக்கெட் கீப்பராக பண்ட் உருவெடுத்துள்ளார்.
முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி 2,496 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பண்ட் அவரை முந்தியுள்ளார்.
ரிஷாப் பண்ட் 51 டெஸ்ட் போட்டிகளில் 43.60 சராசரியுடன் 3,662 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 20 அரைசதங்கள் அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |