மைதானத்தை விட்டு வெளியே பறந்த பந்து! ருத்ர தாண்டவமாடிய ரிஷப் பண்ட் 99 ரன்னில் அவுட் (வீடியோ)
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் சதம் விளாசினார்.
சர்பராஸ் கான் 150
பெங்களூருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.
தனது முதல் சதத்தினை பதிவு செய்த சர்பராஸ் கான், 195 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 150 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
?@SpaceX has competition ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 19, 2024
(via @BCCI) #INDvNZ #RishabhPant pic.twitter.com/8H6LfCpzm6
மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ரிஷாப் பண்ட், 90 ஓட்டங்களில் இருந்தபோது, நியூசிலாந்து கேப்டன் சௌதீயின் ஓவரில் அடித்த சிக்ஸர், மைதானத்தை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்
அதனைத் தொடர்ந்து பண்ட் சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது, ரூர்க்கே ஓவரில் Inside Edgeயில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
இதனால் பண்ட் உட்பட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மொத்தம் 105 பந்துகளை எதிர்கொண்ட பண்ட் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 99 ஓட்டங்கள் எடுத்தார்.
Unbelievable scenes at #Chinnaswamy #Bengaluru. #RishabhPant clean bowled at 99#INDvsNZ pic.twitter.com/6UI2EYUKyV
— KOTH Gaming (@KOTHGaming_) October 19, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |