படுவேகத்தில் மோதி விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட் கார்., சிசிடிவி காட்சி வெளியீடு
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட் கார் விபத்து
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் கார் இன்று காலை, உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கியில் பயங்கர விபத்தில் சிக்கியது.
ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற நிலையில் அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
காயங்களுடன் உயிர் தப்பினார்
கார் எரிந்து சாம்பலாவற்கு முன் ரிஷப் பண்ட் கார் கதவின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பண்ட் காயங்களுடன் உயிர் தப்பினார். பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடியோ ஆதாரங்கள்
இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் ரிஷப் பண்ட்டுக்கு உதவ வந்த நபர்களால் செல்போனில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது,
மேலும், விபத்து நடந்த இடத்தில் பண்டின் கார் வேகமாக வந்து மோதும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Shocking accident caught on camera. #RishabhPant's car crashed into a divider, car caught fire 6 minutes after the crash. pic.twitter.com/nsWrFvji73
— Shubhankar Mishra (@shubhankrmishra) December 30, 2022
அம்மாவுக்கு சர்ப்ரைஸ்
ரிஷப் பண்ட் தனது அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவும், புத்தாண்டை தனது குடும்பத்துடன் கழிக்கவும் டெல்லியிலிருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றபோது, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.21 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
காரை ஓட்டிச்செல்லும்போது ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட பயக்கும் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.