தவான் பேச்சை கேட்டிருந்தால் ரிஷபுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. பழைய வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி, உயிர் பிழைத்து தற்போது சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஷிகர் தவான் அவருக்கு முன்பே அறிவுரை கூறிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
ரிஷப் பண்ட் விபத்து
டிசம்பர் 30, 2022 அன்று ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கழிக்க டெல்லியில் இருந்து ரூர்க்கி செல்லும் போது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அவர் தனது Mercedes-AMG காரை ஓட்டிச் சென்றபோது, டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகி அதிவேகமாக சாலையில் சறுக்கிச் சென்றது.
இதனால் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு அவர் வெளியே வந்து காயங்களுடன் உயிர்தப்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை
உயிருக்கு எந்த ஆபத்தும் யில்லை என்றாலும், உடல் முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவர் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரிஷப் பண்ட் கார் ஓட்டும்போது தூங்கிவிட்டதாகவும், கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது, இதுவே விபத்துக்கு வழிவகுத்தது என்று காவல்துறை தெரிவித்தது.
ஷிகர் தவான் அறிவுரை
இந்த சம்பவத்தை அடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸைச் சேர்ந்த ரிஷப் பணட் மற்றும் ஷிகர் தவான் இருவரும் வேடிக்கையான கேள்வி பதில் விளையாட்டில் விளையாடும் பழைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பண்ட், தனக்கு ஏதேனும் அறிவுரை வழங்கினால், என்ன சொல்வீர்கள் என்று தவானிடம் கேட்க, சற்றும் யோசிக்காத தவான் "வண்டியை மெதுவா ஓட்டு" என கூறினார்.
the most valuable advice was given by shikhar dhawan to pant ♥️#RishabhPant #BCCI @DelhiCapitals pic.twitter.com/SshMBapvFL
— ?वसुसेन? (@Mrutyyunjay) December 30, 2022
இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், அவரது அறிவுரையை பண்ட் பின்பற்றியிருந்தால் இன்று அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அவர் காரை வேகமாக ஓட்டுவார் என்பது தவானுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வரும் பண்டுக்கு தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் வாழ்த்தி வேண்டிவருகின்றனர்.