கடைசி போட்டியில் சிக்ஸர் மழை! 55 பந்தில் சதமடித்த பண்ட் (வீடியோ)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ரிஷாப் பண்ட்டின் அதிரடி சதம் மூலம் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் 227 ஓட்டங்கள் குவித்தது.
மார்ஷ் அதிரடி
ஐபிஎல் 2025யின் தனது கடைசிப் போட்டியில் லக்னோ அணி பெங்களூருவை எதிர்கொண்டுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) பந்துவீச்சை தெரிவு செய்தது.
AN ICONIC HUNDRED CELEBRATION BY RISHABH PANT. 🥶pic.twitter.com/erSVAEHyz4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 27, 2025
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் மேத்யூ பிரீட்ஸ்க் 14 ஓட்டங்களில் துஷாரா ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ரிஷாப் பண்ட், தொடக்க வீரர் மிட்செல் மார்ஷுடன் சேர்ந்து ருத்ர தாண்டவம் ஆடினார்.
இருவரின் அதிரடியில் லக்னோ அணி 200 ஓட்டங்களை கடந்தது. மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 37 பந்துகளில் 67 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) குவித்து அவுட் ஆனார்.
Marsh doesn’t chase milestones. He stacks them 💪 pic.twitter.com/GJ9VaoskTU
— Lucknow Super Giants (@LucknowIPL) May 27, 2025
ரிஷாப் பண்ட் ருத்ர தாண்டவம்
எனினும் சிக்ஸர் மழைபொழிந்த ரிஷாப் பண்ட் (Rishabh Pant) 55 பந்துகளில் சதம் விளாசினார். இது அவருக்கு இரண்டாவது ஐபிஎல் சதமாகும்.
கடைசிவரை களத்தில் இருந்த பண்ட் 61 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் லக்னோ அணி 3 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் குவித்தது. புவனேஷ்வர் குமார், துஷாரா மற்றும் ஷெப்பர்ட் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |