தோனியின் 17 ஆண்டுகால சாதனையை அடித்து நொறுக்கிய ரிஷப் பண்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தோனியின் சாதனையை பண்ட் முறியடித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் துடுப்பாட்டம் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்கள் குவித்துள்ளது.
புஜாரா, கோலி போன்ற அனுபவ வீரர்கள் சொதப்பிய நிலையில், இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக 89 பந்துகளில் சதம் விளாசினார். இது அவருக்கு 5வது டெஸ்ட் சதம் ஆகும்.
PC: Twitter
இந்த சதத்தின் மூலம் அவர் தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் தோனி 93 பந்துகளில் சதம் விளாசி டெஸ்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
அதனை தற்போது முறியடித்துள்ள பண்ட், இங்கிலாந்து மண்ணில் இரண்டு சதம் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே போல் ஆசியாவிற்கு வெளியே 4 சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
நேற்றைய இன்னிங்சில் பண்ட் 111 பந்துகளில் 146 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர், 20 பவுண்டரிகள் அடங்கும்.
PC: Twitter (@englandcricket)