ஐபிஎல்! கையை நோக்கி வந்த கேட்சை கோட்டை விட்ட கேப்டன்... வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் கைக்கு வந்த எளிதான கேட்சை கோட்டை விட்டார்.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை வீரர் டிவால்ட் பிரீவீஸ் 25 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது குல்தீப் யாதவ் வீசிய பந்தை பிரீவீஸ் அடித்த போது பந்து மேல் நோக்கி சென்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைக்கு சென்றது.
Is that @RishabhPant17 dropping the playoffs spot for @DelhiCapitals ?? @mipaltan #MIvDC #IPL2022 @RCBTweets might be praying for this. pic.twitter.com/pFdeIwbZfl
— Treckons (@Treckons007) May 21, 2022
அதை அவர் எளிதாக பிடித்து விடுவார் என அனைவரும் நினைத்தனர்.
ஆனால் கேட்சை கோட்டை விட்டார் ரிஷப். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.