பாகிஸ்தானை மிரட்டிய ரிஷப் பண்ட்: பாராட்டு மழையில் நனைத்த ரவி சாஸ்திரி!
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய உலக கோப்பை கிரிக்கெட் டி20 லீக் போட்டியில் ரிஷப் பண்ட்டின் அபார ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டினார்.
ரிஷப் பண்ட்டின் அபார ஆட்டம்
உலகக் கோப்பை 2024 ன் 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரிஷப் பண்ட்டின் அதிரடியான விளையாட்டை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
18 மாதங்களுக்கு முன்பு, ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கி, மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்லாமல், நடமாடக்கூட முடியுமா என்று சந்தேகத்தில் இருந்த ரிஷப் பண்ட்டின் நேற்றைய ஆட்டம் அனைவரையும் வெகுவாக ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஓட்டங்கள் குவிக்க தடுமாறி கொண்டு இருந்த போது, ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்து இந்திய அணிக்கு சற்று ஆறுதல் தந்தார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியும் பெற்றது.
ரவி சாஸ்திரி உருக்கம்
போட்டி நிறைவுக்கு பிறகு வீரர்களின் உடை மாற்றும் அறையில் பேசிய ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட்டின் அபார ஆட்டம் குறித்து உணர்ச்சி பட உரையாற்றினார்.
Ravi Shastri presented Best Fielder of the match award to Rishabh Pant ?❤️
— Flamboy Pant (@flamboypant) June 10, 2024
Also those words from Shaz ? https://t.co/octpAnURAq pic.twitter.com/Ed0tErXTZ6
அதில், "இத்தனை கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்து, பாகிஸ்தான் போன்ற உயர் பதட்டம் மிகுந்த போட்டியில் இப்படி விளையாடியிருப்பது பெருமைக்குரியது” என்று சாஸ்திரி கூறினார்.
பண்ட்டின் பேட்டிங்கை மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங்கிலும் அவர் காட்டிய வேகமான மீட்சியையும் பாராட்டிய அவர், இந்த மீள்வருகைக்கு பின்னால் இருக்கும் அபார உழைப்பை சுட்டிக்காட்டினார்.
மனித ஆத்மாவின் வலிமையையும், எதிர்ப்புகளை கடந்து வெற்றி பெறும் ஆற்றலையும் பண்ட்டின் மீள்வருகை உலகிற்கு காட்டுகிறது என்று கூறி சாஸ்திரி தனது பேச்சை முடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |