இந்தியா 720 ஓட்டங்கள்: சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிஷாப் பண்ட்..புதிய சாதனை
Rishabh pant record century vs new zealand: அனைத்து SENA நாடுகளிலும் சதம் விளாசிய முதல் ஆசிய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷாப் பண்ட் படைத்தார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷாப் பண்ட், அனைத்து SENA நாடுகளிலும் சதம் விளாசிய முதல் ஆசிய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை படைத்தார்.
இந்திய அணி 720 ஓட்டங்கள்
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடந்து வருகிறது.
நான்காவது நாளான இன்று இந்திய அணி 720 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கே.எல்.ராகுல் 136 ஓட்டங்களும், ரிஷாப் பண்ட் 128 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்) விளாசினர்.

ரிஷாப் பண்ட் புதிய சாதனை
இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம், அனைத்து SENA நாடுகளிலும் சதம் விளாசிய முதல் ஆசிய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷாப் பண்ட் (Rishabh Pant) படைத்தார்.
உலகளவில் ஆடம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா), ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர்.
