எதிரணி வீரர்களுடன் சேர்ந்து தான் அவுட்டானதை தானே கொண்டாடிய ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ
இந்தியா - லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தான் அவுட் ஆனதை தானே கொண்டாடினார்.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. கே.எஸ்.பரத் 70 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 2-வது நாளான நேற்று இந்தியா முந்தைய நாள் ஸ்கோருடன் (246 ரன்) டிக்ளேர் செய்தது.
இதையடுத்து லீசெஸ்டர்ஷைர் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. எதிரணியிலும் சில இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டிருந்ததால் அவர்களின் பேட்டிங் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
☝️ | Pant (76), ? Iyer, ? Jadeja.@RishabhPant17’s incredibly entertaining innings ends. ?
— Leicestershire Foxes ? (@leicsccc) June 24, 2022
He gets a hug from Jadeja & high fives from his @BCCI teammates.
? LEI 213/7
???? ??????: https://t.co/DdQrXej7HC?
? #IndiaTourMatch | #LEIvIND | #TeamIndia pic.twitter.com/80rSTLyMCe
இதில் புஜாரா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதே சமயம் மட்டையை தடாலடியாக சுழட்டி கவனத்தை ஈர்த்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 76 ரன்கள் (87 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) நொறுக்கினார்.
அவர் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் ஆனார். அவுட் ஆன பின்னர் பண்டை எதிரணியை சேர்ந்த ஜடேஜா கட்டிபிடித்ததோடு, அந்த அணியில் இருந்த இந்திய அணி வீரர்களும் அவரை கட்டிபிடித்து தட்டி கொடுத்தனர்.
இது பண்ட் எதிரணி வீரர்களுடன் சேர்ந்து தனது சொந்த விக்கெட்டை கொண்டாடியதாக இருந்தது.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.