இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி படுகாயம்! எரிந்து சாம்பலான கார்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
ரிஷப் பண்ட் படுகாயம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்பவர் ரிஷப் பண்ட். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கியில் ரிஷப் பண்ட் சென்ற கார் பெரிய விபத்தில் சிக்கியுள்ளது.
அதன்படி கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பின்னர் தீப்பிடித்து எரிந்து கார் சாம்பலானது.
Rishabh Pant has suffered a serious car accident early morning. Admitted in a Roorkee hospital. pic.twitter.com/QQvHuanDCF
— Vikrant Gupta (@vikrantgupta73) December 30, 2022
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயமடைந்தார். பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். மருத்துவமனையில் அவர் தலையில் கட்டுடன் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
Wishing #Rishabpant a speedy recovery ?? pic.twitter.com/1xb2ouoT6n
— Suhaan?? (@MohammedSuhaan7) December 30, 2022