தினேஷ் கார்த்திக்கு போட்டியாக வந்து நிற்கும் வீரர்! இந்திய அணி பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்?
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதில் தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பண்டிற்கும் போட்டி நிலவுகிறது.
ஆசியக்கோப்பை டி20 தொடர் வரும் 27ஆம் திகதி தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேன் இடத்திற்கு தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பண்டிற்கும் போட்டி நிலவுகிறது.
ஏனெனில் இருவரில் ஒருவர் தான் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். இது தொடர்பில் பண்டே தனது மௌனத்தை உடைத்து, பிளேயிங் லெவனில் இடம்பெற போட்டி இருப்பதாக கூறியிருக்கிறார்.
india.com
தனிநபர்களாகிய நாங்கள் எப்போதும் அணிக்கு 100 சதவீதத்தை வழங்க விரும்புகிறோம். மற்றதெல்லாம் பயிற்சியாளர் மற்றும் கேப்டனைப் பொறுத்தே அமையும் என்றார்.
தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே தொடர்ந்து சிறப்பாக விளையாட முயன்று வருகின்றனர்.
இதில் யார் அணிக்கு தேர்வாகி விளையாடுவார்கள் என்பது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.