தேவையில்லாம அவுட்டாயிட்டு மைதானத்தில் இப்படியா செய்வது? வைரலான இந்திய வீரர் புகைப்படம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் ரிஷப் பண்டின் ஒற்றை புகைப்படம் வைரலாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.
இப்போட்டியில், புதிய முயற்சியாக ரோகித் சர்மாவுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். ஆனால் 18 ரன்களில் தேவையில்லாத 'ஷாட்' ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரிஷப் பண்ட்.
Just Rishabh Pant thinks ??#INDvWI #INDvsWI pic.twitter.com/6gMYO5JKph
— CRICKET VIDEOS ? (@AbdullahNeaz) February 9, 2022
இந்த நிலையில் ரிஷப் பண்ட் மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே ஹாயாக படுத்து கிடந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தேவையில்லாத வகையில் அவுட்டாகிவிட்டு எதுவும் நடக்காதது போல ஜாலியாக படுத்திருந்த அவர் புகைப்படத்தை வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.