WTC தொடரில் அதிக சிக்ஸர்கள்; சாதனை படைத்த ரிஷப் பண்ட்
rishabh pant record as hit most sixes in wtc: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 356 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக தாமஸ் பிளண்டெல் 89 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 116 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
ரிஷப் பண்ட் சாதனை
ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 64 டெஸ்ட் போட்டிகளில் 88 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
தற்போது, ரிஷப் பண்ட் 44 போட்டிகளில் 89 சிக்ஸர்கள் விளாசி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா 56 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், சுப்மன் கில் 48 சிக்ஸர்களுடன் 4வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 சிக்ஸர்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.