டெஸ்ட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ரிஷப் பண்ட்
டெஸ்ட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
இந்தியா 429 ஓட்டங்கள் முன்னிலை
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 10 விக்கெட்களை இழந்து 587 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் இரட்டை சதம்(269) அடித்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 10 விக்கெட்களை இழந்து, 403 ஓட்டங்களை குவித்தது.
ஹாரி ப்ரூக் 158 ஓட்டங்களும், ஜேமி ஸ்மித் 184 ஓட்டங்களும் குவித்தனர். இதில், இங்கிலாந்து வீரர்கள் 6 பேர், ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.
அதை தொடர்ந்து, தனது 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 4 வது நாள் இடைவேளை வரை , 4 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணி 429 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரிஷப் பண்ட் சாதனை
அணித்தலைவர் சுப்மன் கில் அரைசதம் அடித்து நிதானமாக ஆடி வருகிறார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள், 58 பந்துகளில், 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
இதில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் மட்டும், ரிஷப் பண்ட் இதுவரை 24 சிக்சர்கள் அடித்துள்ளார். முன்னதாக, பென் ஸ்டோக்ஸ் தென்னாப்பிரிக்காவில் 21 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மேத்யூ ஹேடன், இந்தியாவில் 19 சிக்ஸர்களுடனும், விவ் ரிச்சர்ட் இங்கிலாந்தில் 16 சிக்ஸர்களுடனும், ஹாரி புரூக், நியூசிலாந்தில் 16 சிக்ஸர்களுடனும் இந்த பட்டியலில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |