இலக்கு கொஞ்சம் நகர்ந்துள்ளது..வலுவாக திரும்பி வருவோம்! ரிஷப் பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் அதிரடியில் மிரட்டிய ரிஷப் பண்ட், வலுவாக திரும்பி வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.
நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து, பர்மிங்காமில் நடந்த கடைசி டெஸ்டில் இந்திய அணியுடன் மோதியது.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியில் ரிஷப் பண்ட் ருத்ர தாண்டவம் ஆடினார்.
முதல் இன்னிங்சில் 111 பந்துகளில் 146 ஓட்டங்கள் விளாசிய பண்ட், இரண்டாவது இன்னிங்சில் 57 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் 4 கேட்சுகளை பிடித்து அசத்தினார்.
Target has moved little farther but the focus is still intact. We will be back stronger. ????? pic.twitter.com/6UFxWuCsIZ
— Rishabh Pant (@RishabhPant17) July 5, 2022
இந்த நிலையில் வலுவாக திரும்பி வருவோம் என அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இலக்கு சிறிது தூரம் நகர்ந்துள்ளது, ஆனால் எங்கள் குறி அப்படியே தான் உள்ளது. மீண்டும் வலுவாக திரும்பி வருவோம்' என தெரிவித்துள்ளார்.
PC: Getty Images