ஊன்றுகோலுடன் ரிஷப் பண்ட்., கார் விபத்துக்குப் பிறகு வெளியிட்ட முதல் புகைப்படம்
ரிஷப் பண்ட் கார் விபத்துக்குப் பிறகு முதல்முறையாக தனது சமூக ஊடக பக்கங்களில் சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஊன்றுகோல் உதவியுடன் குணமடைந்து வருகிறார்
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பண்ட் பலத்த காயமடைந்தார். அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இப்போது பந்த் சமூக ஊடகங்களில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடப்பதைக் காணலாம். கார் விபத்துக்குப் பிறகு அவர் பகிர்ந்துள்ள முதல் படம் இதுவாகும்.
Instagram Rishab Pant
படத்துடன் "ஒரு படி முன்னோக்கி, ஒரு படி வலிமையாக, ஒரு படி சிறப்பாக" என்று அவர் எழுதினார். அவரது வலது கால் கட்டு போடப்பட்டுள்ளது. ஊன்றுகோல் உதவியுடன் நடக்க முயற்சிக்கிறார்.
கார் விபத்து
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டிசம்பர் 30 அன்று சாலை விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு தனியாக காரில் சென்றபோது ரூர்க்கி அருகே விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் பண்ட் பலத்த காயம் அடைந்தார்.
அவரது கார் தீப்பிடித்த நிலையில், காரின் கண்ணாடியை உடைத்துகொண்டு எப்படியோ வெளியேறி உயிர்தப்பினார். இந்த விபத்தின் பல படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பண்ட் தலையில் இரண்டு வெட்டு காயங்கள் இருந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவரது வலது முழங்காலில் தசைநார்கள் கிழிந்திருந்தன, மேலும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் ஏற்பட்டது. மேலும், அவரது முதுகில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. ஜனவரி 6-ஆம் தேதி, அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐபிஎல் 2023-ல் விளையாடுவதில் சந்தேகம்
கார் விபத்துக்கு முன் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு பண்ட் துபாய் சென்றிருந்தார். அங்கிருந்து டிசம்பர் 29-ம் திகதி டெல்லி வந்த அவர் அங்கிருந்து தனி காரில் சென்றபோது ரூர்க்கியில் விபத்துக்குள்ளானார்.
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பண்ட் சேர்க்கப்படவில்லை. காயத்திற்குப் பிறகு பந்த் ஐபிஎல் 2023-ல் விளையாடுவது குறித்து இப்போது சந்தேகம் உள்ளது. பண்ட் முழுமையாக குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.