நான் என்னடா பாவம் பண்ணேன்! வித்தியாசமான முறையில் ரன் அவுட்டான ரிஷப் பண்ட! சோகமாக வெளியேறிய காட்சி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட வித்தியாசமான முறையில் அவுட்டானார்.
இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக ரிஷப் பண்டக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், சோகமடைந்த அவர் முகத்தில் கடுமையான வருத்தத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
இவை அனைத்தும் இந்திய இன்னிங்ஸின் 18-வது ஓவரின் மூன்றாவது பந்தில் நடந்தது.
கடந்த சில போட்டிகளில் 4-வது இடத்தில் அவர் களமிறங்கினார். சிலர் அந்த இடம் அவருக்கு சரி வராது என்றும் ஒரு சிலர், அவரை ஓப்பனிங் இறக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அmனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை இன்று வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு தகுந்தால் போல் பொறுப்பான ஆட்டத்தை பண்ட் வெளிப்படுத்த, 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் விளாசி 11 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, சிவனே என்று எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது துடுப்பாடிய சூரியகுமார் யாதவ், அல்ஜாரி ஜோசப்பின் பந்தில் ஒரு ஸ்ட்ரைட் டிரைவ் ஆட , அது நேராக பந்துவீச்சாளரின் காலில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அந்தநேரம் பார்த்தது, ரிஷப் பண்ட் ரன் ஓடுவதற்காக கிரீஸை விட்டு வெளியே நின்றதால் மோசமாக ரன் அவுட்டானார்.
— jennifer (@jennife74834570) February 6, 2022
இதனால் ஏமாற்றம் அடைந்த ரிஷப் பண்ட் உங்களுக்கு நான் என்னடா பாவம் பண்ணேன் என்ற தோரணையில் சோகத்துடன் மைதானத்தைவிட்டு பெவிலியன் நோக்கி நடந்தார். இதனால் ரசிகர்களும் சோகமடைந்தனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.