ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை போலவே அது உள்ளது: இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் நடந்து வருகின்றன.
இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், கோப்பையை வெல்வதற்கான இறுதி போட்டி இன்று நடக்க உள்ளது.
இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், களத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் தடுமாறுவதாகவும், பல சமயங்களில் ரிஸ்க் முடிவுகளை அவர் எடுப்பதாகவும் விமர்சனங்கள் நிலவுகின்றன.
Photo Credit: Ashley Vlotman/Gallo Images/Getty Images
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'ரிஷப் பண்ட் ஓட்டங்கள் எடுக்கும்போது, மக்கள் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர் சரியாக விளையாடாத போதும், மக்கள் இன்னும் அவரைப் பற்றி பேசுகிறார்கள்.
அவரது கேப்டன்சியிலும் இதே பாணி உள்ளது. அவருக்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும். அவர் களத்திற்கு வெளியே சிந்திக்க விரும்புகிறார். அவர் தனது உள்ளுணர்வை மிக அதிகமாக பின்பற்ற முயற்சிக்கிறார்.
ரிஷப் பண்ட் நிறைய வாய்ப்புக்களை எடுக்க விரும்புகிறார். அவர் ரிஸ்க்கான முடிவுகளை எடுக்கும்போது அந்த சமநிலையைக் கண்டறிய வேண்டும். இவை அவரது துடுப்பாட்டத்தை போலவே உள்ளன' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: ZEE