ஐபிஎல் மீண்டும் களமிறங்கும் ரிஷப் பண்ட்: சவுரவ் கங்குலி தெரிவித்த மகிழ்ச்சியான செய்தி
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல்-லில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
வளரும் அதிரடி நாயகனாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஐபிஎல் -லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்ததோடு மட்டுமல்லாமல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால கேப்டனாகவும் பார்க்கப்பட்டு வந்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கி கொண்ட ரிஷப் பண்ட், மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அத்துடன் 2023ல் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதோடு, நடப்பு உலக கோப்பை தொடரிலும் விலகினார்.
ஆனால் தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ரிஷப் பண்ட் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |