டி20 உலக கோப்பை மைதானத்தில் பெண்ணின் பெயரை வைத்து இந்திய வீரரை கிண்டல் செய்த ரசிகர்கள்! வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட்டை நடிகை ஊர்வசியின் பெயரை முன்வைத்து ரசிகர்கள் மைதானத்தில் கிண்டல் செய்ததற்கு கண்டனம் எழுந்துள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவதில் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருகிறது.
அரையிறுதி போட்டியில் இருவரில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று இறுதி ஆட்டதில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இந்த ஆட்டத்தின்போது மைதானத்தில் எல்லைக்கோட்டின் அருகே சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட்டை இந்திய ரசிகர் ஒருவர், ஊர்வசி விவகாரத்தை முன்வைத்துக் கிண்டல் செய்தார்.
Jaake lele phir ?#Rishabpant #UrvashiRautela pic.twitter.com/PGGX1K5kIl
— Antareep Gohain (@antareep_s2002) November 7, 2022
அண்ணா ஊர்வசி கூப்டறாங்க என சத்தமாக ரிஷப் காதில் விழும்படி கூறினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த ரிஷப், அப்ப போய் என்னன்னு கேளு என்றார்.
கிரிக்கெட் வீரரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ரசிகருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். ரிஷப்பும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
இதனை மறுத்த ரிஷப், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.