இமாலய சாதனையை தவறவிட்ட பண்ட்: இந்திய அணி 564 குவித்து டிக்ளேர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இமாலய சாதனை ஒன்றை ரிஷப் பண்ட் தவறவிட்டார்.
ராகுல், கில் சதம்
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் (100), சுப்மன் கில் (126) ஆகியோர் சதம் விளாச, சாய் சுதர்ஸன் (81) மற்றும் ரிஷப் பண்ட் (81) இருவரும் அரைசதம் அடித்தனர்.
இதில் ரிஷப் பண்ட் துடுப்பாட்டத்தில் இருந்தபோது சாதனை ஒன்றை நோக்கி பயணித்தார். அதாவது அவர் இந்த இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள் அடித்தபோது, டெஸ்ட் அரங்கில் அவரது மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது.
100 சிக்ஸர்கள் சாதனை
எனவே, அவர் இன்னும் 3 சிக்ஸர்கள் அடித்திருந்தால், டெஸ்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற இமாலய சாதனையை படைத்திருப்பார்.
ஆனால், ஷஹிதி பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தால், அடுத்த இன்னிங்ஸ் அல்லது இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக அவர் காத்திருக்க வேண்டும்.
இதற்கிடையில் மானவ் சுதர் (28), வாஷிங்டன் சுந்தர் (52), சிராஜ் (28) ஆகியோரின் பங்களிப்பின் மூலம், 564 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |