கடைசி 4 ஓவர்களில் 50 ஓட்டங்கள்! சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்..கதி கலங்கிய மே.தீ
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வங்காளதேசத்தின் ரிஷாத் ஹொசைன் 14 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசினார்.
ரிஷாத் ஹொசைன்
வங்காளதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. சைப் ஹசன் 6 ஓட்டங்களிலும், டௌஹித் 12 ஓட்டங்களிலும், ஷாண்டோ 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
நிதானமாக ஆடிய சௌமியா சர்கார் 89 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்தார். அணித்தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் பொறுமையாக ஓட்டங்கள் சேர்க்க, ரிஷாத் ஹொசைன் (Rishad Hossain) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
மோட்டி 3 விக்கெட்டுகள்
வங்காளதேச அணிக்கு கடைசி 4 ஓவர்களில் 50 ஓட்டங்கள் கிடைத்தது. இதன்மூலம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் எடுத்தது.
ரிஷாத் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
மெஹிதி ஹசன் 58 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 32 ஓட்டங்கள் எடுத்தார். மோட்டி 3 விக்கெட்டுகளும், அக்கேல் ஹொசெய்ன் மற்றும் அலிக் அதனசி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |