தினேஷ் கார்த்திக்கு போட்டியாக இருந்த ரிஷப் பண்ட்! உலகக் கோப்பையை தவற விடுகிறார்
2023ல் நடக்கும் ஐபிஎல் போட்டிகள், உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றை ரிஷப் பண்ட் தவற விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இருக்கிறார். அவருக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திகும் இடையில் தான் அணியில் இடம்பெறுவது தொடர்பில் தொடர்ந்து போட்டி நிலவி வந்தது.
இந்த சூழலில் ரிஷப் பண்ட் கடந்த 30ஆம் திகதி கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவரின் கால் முட்டு மற்றும் கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பப்பட்டது.
insidesport
ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை
ஆனால் இன்னும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய எனவும் வேண்டும் எனவும் இந்த அறுவை சிகிச்சை 6 வாரங்களுக்குப் பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது காயம் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்ப கிட்டதட்ட ஒரு வருடம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலைமையில் ரிஷப் பண்ட் இந்த ஆண்டில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. குறைந்தது 6 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டி இருக்கும்.
இதனால் நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடரை முழுமையாக தவற விடுகிறார். இதை டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலியும் உறுதி செய்துவிட்டார்.
அதே போல நவம்பரில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது.