எனக்காக பல மணி நேரம் காத்திருந்தார் என கூறிய லெஜண்ட் பட நடிகை! இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் தந்த பதிலடி
* இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை மறைமுகமாக சாடிய நடிகை ஊர்வசி ரவுத்தேலா
* ரிஷப் பண்ட் கொடுத்த பதிலடி பதிவு
லெஜண்ட் திரைப்படத்தில் அண்ணாச்சி சரவணனுடன் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா குறித்து இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் போட்டுள்ள பதிவு விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒருமுறை டெல்லியில் ஒரு நிகழ்ச்சிகாக சென்றிருந்த போது 10 மணி நேரத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் 'RP' என்ற எழுத்துகளில் பெயர் தொடங்கும் பிரபலம் எனக்காக ஹொட்டலில் பல மணி நேரம் என்னை காண காத்திருந்தார், என்னுடன் பேசுவதற்காக போராடினார் என கூறினார்.
ஊர்வசி கூறிய அந்த பிரபலம் ரிஷப் பண்ட் தான். ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு ரிஷப் பண்ட் - ஊர்வசி இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் பலமுறை அவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகின.
பின்னர் இந்த தகவலை மறுத்த ரிஷப் இஷா நேகியை காதலிப்பதாக சொன்னார். இருவருக்கும் இப்படியொரு பிரச்சனை இருக்கும் சூழலில் தான் ஊர்வசி இப்படி பேசினார்.
இது தொடர்பாக ரிஷப் போட்டுள்ள சமூகவலைதள பதிவில், பிரபலமடைவதற்காக சிலர் நேர்காணலில் இந்த அளவிற்கு கூட பொய் கூறுவார்களா என்பது வேடிக்கையாக உள்ளது. மற்றொருபுறம் பெயர் புகழுக்காக, ஒருவர் இப்படியும் அலைகிறார்களா என்று வருத்தமாகவும் உள்ளது. அவர்களுக்கு கடவுள் தான் நல்வழி காட்ட வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.