கடைசி ஓவர் முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி! அடுத்த பந்தில் அவரை அவுட்டாக்கி பழிதீர்த்த வீடியோ
ஐபிஎல் போட்டியில் முக்கியமான கட்டத்தில் சென்னை வீரர் தோனியின் விக்கெட்டை பஞ்சாப் வீரர் ரிஷி தவான் வீழ்த்தியுள்ளார்.
நேற்று நடந்த சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி ஓவரின் முதல் பந்தை தோனி எதிர்கொண்ட நிலையில் அவருக்கு ரிஷி தவான் பந்து வீசினார்.
ஓவரின் முதல் பந்தை பெரிய சிக்சருக்கு பறக்கவிட்டார் தோனி. இதையடுத்து இரண்டாவது பந்தை இடது பக் வைட் திசையில் ரிஷி வீச அதையும் தூக்கி விளாசினார் தோனி.
Dhoni's yesterday match six vs Rishi Dhawan #CSKvsPBKS pic.twitter.com/Zm02q3z140
— Hitman Pull Shot (@shot_hitman) April 26, 2022
ஆனால் துரதிஷ்டவசமாக பந்தானது பையிர்ஸ்டோ கைக்கு கேட்சாக சென்றது. இதையடுத்து 12 ரன்களில் தோனி அவுட்டாக முந்தைய பந்தில் சிக்சர் அடித்ததற்கு ரிஷி பழிதீர்த்து கொண்டார்.
தோனி அவுட்டானதன் மூலம் சென்னை அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.
மேலும் நேற்றைய போட்டியில் ரிஷி முக கவசம் அணிந்தபடி பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
— Cricket IPL (@CricketIPL20) April 25, 2022