இந்திய வம்சாவளியினர் எச்சரித்ததுபோலவே நடந்துவிட்டது: பிரித்தானியாவில் திடீர் கவனம் ஈர்த்துள்ள ரிஷி சுனக்...
இந்திய வம்சாவளி முன்னாள் அமைச்சரான ரிஷி சுனக் திடீரென சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகியுள்ளார்.
அவர் எச்சரித்தது போலவே ஆகிவிட்டது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பிரதமருக்கான போட்டியில் தோல்வியடைந்த நிலையிலும், பிரித்தானியாவில் திடீரென மக்களின் கவனம் ஈர்த்துள்ளார் இந்திய வம்சாவளியினரும், பிரித்தானியாவின் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக்.
பிரித்தானிய கரன்சியான பவுண்டின் மதிப்பு, சுமார் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
பங்குச் சந்தைகள் தடுமாற, அதே நேரத்தில் ட்விட்டர் முதலான சமூக ஊடகங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளார் இந்திய வம்சாவளியினரும் முன்னாள் சேன்ஸலருமான ரிஷி சுனக்.
காரணம், லிஸ் ட்ரஸ்ஸின் பொருளாதாரத் திட்டங்களால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் என ஆகத்து மாதத்திலேயே எச்சரித்திருந்தார் ரிஷி. செப்டம்பருக்குள் அரசு தடுமாற்றம் காணும் என்றும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.
Liz Truss can't say she wasn't warned that her plan was a fairy tale.
— Haggis_UK ?? ?? (@Haggis_UK) September 26, 2022
Rishi Sunak(former Chancellor) - "We have to be honest. Borrowing your way out of inflation isn't a plan - it's a fairy tale." pic.twitter.com/8AerErsXaY
பணவீக்கமும், வட்டி வீதங்களும் அதிகரிக்கும் என்று தான் அஞ்சுவதாகவும் தெரிவித்திருந்தார் ரிஷி.
தற்போது, ரிஷி சொன்னதை நினைவுகூரும் மக்கள், ரிஷி சரியாக சொன்னார், அதற்காக அவரை கேலி செய்தார்கள், ஆனால், அவர் சொன்னது சரி என்றே இப்போது தோன்றுகிறது என்கிறார்கள்.
ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒருவர், லிஸ் ட்ரஸ், தனக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்பது தெரியாது என்று சாக்குப்போக்கு சொல்ல முடியாது. ஏனென்றால் ரிஷி ஏற்கனவே அது குறித்து எச்சரித்திருந்தார் என்கிறார்.
மற்றொருவர், இப்போது பார்த்தால், ரிஷிதான் பிரதமராக சரியான நபர் என தோன்றுகிறது, அவரது தோலின் நிறம் காரணமாக அவர் தோற்கடிக்கப்பட்டுவிட்டார் என்கிறார்.