மீண்டும் சர்ச்சையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி: இம்முறை என்ன காரணம் தெரியுமா?
பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவதே வழக்கமாகிவிட்டது. இம்முறை பிரதமர் பயன்படுத்தும் பேனாவால் சர்ச்சை உருவாகியுள்ளது.
பேனாவால் என்ன சர்ச்சை?
ரிஷி, முக்கிய அரசு ஆவணங்களில் எழுதுவதற்கும், சர்வதேச உச்சி மாநாடுகளில் அதிகாரப்பூர்வ கடிதங்களில் கையெழுத்திடுவதற்கும் பயன்படுத்தும் பேனாவில், அழிக்கக்கூடிய மை பயன்படுத்தப்படுகிறதாம்.
பிள்ளைகள் எழுதிப்படிப்பதற்காக, அதாவது, எழுதும்போது தவறு வந்துவிட்டால் அதை அழித்துவிட்டு மீண்டும் எழுதுவதற்கு வசதியாக அழையக்கூடிய மை உள்ள பேனாவைத்தான் ரிஷி பயன்படுத்துகிறார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஆக, ரிஷி அந்தப் பேனாவால் எழுதக்கூடிய விடயங்களை அழித்துவிடமுடியும் என்பதால், அது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சிகளும் அது குறித்து பிரச்சினை எழுப்பியுள்ளார்கள். ஏற்கனவே அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
அழியக்கூடிய மை, காணாமல் போகும் மொபைல் போன்கள், மறைந்துபோகும் வாட்ஸ் ஆப் செய்திகள் என அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிக்கும் நிலையில், இவற்றிற்கெல்லாம் அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Tom Brake.
மேலும், பிரதமர் ரிஷியால் கையெழுத்திடப்பட்ட அரசு ஆவணங்களில் அவர் எழுதிய விடயங்களை எளிதாக அழித்து மாற்றங்கள் செய்துவிட வாய்ப்புள்ளது என நிபுணர்களும் எச்சரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |