பொதுத் தேர்தலுக்கு திட்டமிடும் பிரதமர் ரிஷி சுனக்: அரசாங்கத்தின் திட்டம் இதுதான்
எதிர்வரும் 2024ல் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பொதுத் தேர்தலை முன்னெடுக்க ரிஷி சுனக் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல்
மட்டுமின்றி, பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்றும் திட்டங்களையும் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கான திகதி எதையும் இதுவரை முடிவு செய்யவில்லை என்றாலும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் முன்னெடுக்கப்படலம் என்றே தகவல் கசிந்துள்ளது.
பொருளாதாரம் மேம்படும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வர ரிஷி சுனக், இந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்துவார் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி வருமான வரி தொடர்பில் மக்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பை ரிஷி சுனக் நிர்வாகம் மிக விரைவில் வெளியிடும் எனவும், 2024 ஏப்ரல் மாதம் முதல் அது செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், ஊதியம் என்பது மணிக்கு 10.42 பவுண்டுகள் என்பதை 11.16 பவுண்டுகள் என அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் அடுத்த பொதுத் தேர்தலின் போது மக்களிடம் அதிக பணப்புழக்கம் இருக்கும் எனவும், இதனால் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் எனவும் ரிஷி சுனக் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
புலம்பெயர் பிரேரணை அமுல்
அத்துடன், விவாதத்துக்குரிய புலம்பெயர் பிரேரணையானது அமுலுக்கு கொண்டுவரப்பட்டு, சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையும் சரிவடைந்தால், அதும் தங்களுக்கு சாதகமாக அமையும் என மூத்த அரசியல்வாதிகள் நம்புகின்றனர்.
@getty
ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழில் கட்சியினர் சுமார் 18 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளனர். முறைப்படி 2025 ஜனவரியில் தான் பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் 2024 அக்டோபர் - நவம்பரில் தேர்தலை முன்னெடுக்க ரிஷி சுனக் திட்டமிட்டு வருவது, சொந்த கட்சியில் சில உறுப்பினர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.