ருவாண்டா திட்டம்: நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் ரிஷி ஐக்கிய ஒன்றிய தலைவர்களுடன் ரகசிய திட்டம்
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம்
பிரித்தானியா, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோதப் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
பிரித்தானிய பிரதமர் ரிஷியும், முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லாவும், அதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டிவந்தார்கள்.
அவற்றில் ஒன்று, பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டா போன்ற ஒரு நாட்டுக்கு நாடுகடத்தி, அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கும் வரை அவர்களை அந்நாட்டில் தங்கவைப்பதாகும்.
Ukrainian Presidency/Anadolu Agency
ரிஷிக்கு பெரும் பின்னடைவு
ஆனால், உச்சநீதிமன்றம் ருவாண்டா திட்டம் சட்டவிரோதமானது என்னும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதிப்பதாக தெரிவித்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிரதமர் ரிஷிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், தீர்ப்பு வெளியானதுமே, ருவாண்டாவுடன் மீண்டும் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டுவருவதாக தெரிவித்தார் ரிஷி.
ஐக்கிய ஒன்றிய தலைவர்களுடன் ரகசிய திட்டம்
இதற்கிடையில், இத்தாலியின் பிரதமரான Giorgia Meloni மற்றும் ஆஸ்திரியா, ஸ்பெயின் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் சாசனங்களை திருத்தி எழுத திட்டமிட்டுவருகிறார் ரிஷி.
அப்படி அந்த மனித உரிமை நீதிமன்ற சட்டதிட்டங்கள் மாற்றப்படுமானால், மீண்டும் புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்ப சட்டப்படி தங்களுக்கு அனுமதி கிடைக்கும் என ரிஷி நம்புகிறார்.
மொத்தத்தில், உச்சநீதிமன்றமே தடுத்தாலும், புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்ல என்பதில் உறுதியாக நிற்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |