ராணியாரின் சொகுசு படகு... போரிஸ் ஜோன்சனின் கனவுத் திட்டம்: சுக்கலாக உடைத்த ரிஷி சுனக்
பிரதமர் ரிஷி சுனக் உத்தியோகப்பூர்வமாக குறித்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
போரிஸ் ஜோன்சனின் சொகுசு படகு திட்டத்திற்கு 250 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது.
பிரித்தானிய அரசுக்கு சொந்தமாக கப்பல் ஒன்றை கட்டும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கனவுத் திட்டத்தை தற்போதைய பிரதமர் ரிஷி மொத்தமாக மூழ்கடித்துள்ளார்.
குறித்த திட்டமானது முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மிகவும் எதிர்பார்த்த திட்டம் மட்டுமின்றி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முழு ஆதரவும் அந்த திட்டத்திற்கு இருந்துள்ளது.
@getty
1997 வரையில் பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய அந்த கப்பலானது, தற்போது எடின்பர்க்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒன்றாகவும் உள்ளது. குறித்த கப்பலையே மறு உருவாக்கம் செய்துகொள்ள போரிஸ் ஜோன்சன் திட்டமிட்டிருந்தார்.
போரிஸ் ஜோன்சனின் திட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த ஆண்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது பிரதமர் ரிஷி சுனக் உத்தியோகப்பூர்வமாக குறித்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் கூறுகையில், இந்த திட்டத்திற்கு பதிலாக கண்காணிப்புக்கு என கப்பல் ஒன்றை கட்டும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார். தற்போதைய கடும் நெருக்கடியான சூழலில் 35 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிரதமர் ரிஷி சுனக் போராடி வருகிறார்.
@PA
போரிஸ் ஜோன்சனின் சொகுசு படகு திட்டத்திற்கு 250 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது இந்த தொகையானது கண்காணிப்பு கப்பல் கட்டும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றே தெரியவந்துள்ளது.
ரிஷி சுனக்கின் இந்த முடிவை தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரவேற்றுள்ளனர். மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்த தொகையை பயன்படுத்த இருப்பதையும் பாராட்டியுள்ளனர்.
2025ல் குறித்த கப்பல் நாட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும், மிதக்கும் தூதரகமாக அந்த கப்பல் உலகமெங்கும் பயணப்படும் எனவும் கூறுகின்றனர்.