பிரித்தானியாவில் கால் வைத்த சில நாட்களுக்குள்.. புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ரிஷி சுனக் அதிரடி திட்டம்
சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் கால் வைத்த சில நாட்களுக்குள் நாடுகடத்தப்படும் வகையில் அதிரடி திட்டங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
பிரித்தானிய மக்களின் கோபம் நியாயமானதே
இந்த ஆண்டில் மட்டுமே, 44,000 புலம்பெயர்ந்தோர் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியா வந்தடைந்துள்ள நிலையில், அப்படிப்பட்டவர்கள் மூலம் தொடர்ந்து தாங்கள் ஏமாற்ற அனுமதிக்கப்படுவதால், அவர்களைக் குறித்து மக்கள் கோபப்படுவது நியாயம்தான் என்று கூறியுள்ளார் ரிஷி.
Credit: AP
அதிரடி நடவடிக்கைகள்
ஆகவே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சில அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
அதன்படி, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் கால்வைத்த சில நாட்களுக்குள்ளேயே அவர்களை நாடுகடத்த திட்டம் ஒன்று தயாராகிவருகிறது.
சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைவதே சட்டவிரோதமாக கருதப்படும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.
பிரித்தானியாவில் சட்ட விரோதமாக பணி செய்துகொண்டிருப்பவர்களைக் கண்டுபிடிக்க செய்யப்பட்டுவரும் ரெய்டுகள் இரட்டிப்பாக்கப்படும். ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தேசிய குற்றவியல் ஏஜன்சியிடம் கையளிக்கப்படும்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதால் புகலிடக்கோரிக்கைகள் செல்லாததாக்கப்படும், அப்படி நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோர், மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி செய்யும் உரிமையையே இழப்பார்கள்.
மேலும், நிலுவையிலிருக்கும் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலித்தலை 2023க்குள் முடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ரிஷி.
Credit: PA