பிரித்தானிய பிரதமர் ரிஷியின் முகத்துக்கு நேராக வீடற்ற நபர் கேட்ட கேள்வி...
வீடற்ற நபர் ஒருவர், பிரித்தானிய பிரதமர் ரிஷியின் முகத்துக்கு நேராக முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
வீடற்றவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனத்தை சந்தித்த பிரதமர்
பிரித்தானிய பிரதமர் ரிஷி, லண்டனிலுள்ள Passage என்னும் வீடற்றவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வருகை புரிந்திருந்தார். வீடற்றவர்களுக்கு உணவு வழங்குவதுடன், வீடற்ற நிலைமையிலிருந்து விடுபடுவது குறித்து அவர்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன சில தொண்டு நிறுவனங்கள்.
ஆலோசனைகளைக் கேட்ட பலர் வீடற்ற நிலைமையிலிருந்து விடுபட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
வீடற்ற நபர் ரிஷியை முகத்துக்கு நேராக கேட்ட கேள்வி
இந்நிலையில், லண்டனிலுள்ள Passage என்னும் வீடற்றவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வருகை புரிந்திருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், சிலருக்கு தன் கையால் உணவும் வழங்கினார்.
அப்போது அங்கு வந்த ஒருவரிடம் நீங்கள் எப்படியிருக்கிறேன் என ரிஷி கேட்க, நான் பசியாக இருக்கிறேன் என்றார் அவர்.
அவருக்கு ரிஷி உணவு வழங்க, அப்போது ரிஷியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார் Dean என்ற அந்த நபர்.
நீங்கள் பிரித்தானியாவின் பொருளாதார பிரச்சினையை சரி செய்கிறீர்களா என Dean கேட்க, கூட நின்றவர்கள் ஒருகணம் திகைக்க, அதைத்தான் செய்ய முயன்றுகொண்டிருக்கிறேன் என்றார் ரிஷி.
ஆனாலும், வீடற்ற அந்த நபரிடம், நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது போல ரிஷி கேட்ட சம்பந்தமில்லாத கேள்விகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
ட்விட்டரில் வெளியாகியுள்ள அந்த காட்சியை இங்கு காணலாம்.
"Are you sorting the economy out?"
— ITV News (@itvnews) December 23, 2022
"That's exactly what I'm trying to do," Rishi Sunak responds to a homeless man at a London shelter today while serving him breakfast
The PM says the government has pledged £2 billion to tackle homelessness and rough sleeping over three years pic.twitter.com/cQNcyeNeqh