பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு விராட் கோலியின் ஆட்டோகிராப் இடப்பட்ட கிரிக்கெட் மட்டை பரிசு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரித்தானியாவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று தீபாவளிப்பண்டிகையை ஒட்டி, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அவரை பிரதமர் இல்லத்துக்கு வரவேற்றார்.
நேற்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S.ஜெய்ஷங்கர் மற்றும் அவரது மனைவியான க்யோக்கோ (Kyoko Jaishankar) ஆகியோர் தீபாவளியைக் கொண்டாடினர்.
அப்போது, விராட் கோலியின் ஆட்டோகிராப் போடப்பட்ட கிரிக்கெட் மட்டை ஒன்றை ஜெய்ஷங்கர், ரிஷிக்கு பரிசாக வழங்கினார்.
இரண்டு தலைவர்களும், உலகம் முழுவதிலும் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்கள்.
பிரித்தானிய பிரதமர் இல்லத்தில், ரிஷி குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களை ஜெய்ஷங்கர் எக்ஸில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |