பாராளுமன்றத்தில் உளவு பார்த்த விவகாரம்..G20யில் சீன பிரதமரிடம் கவலை தெரிவித்த ரிஷி சுனக்
G20 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெய்ஜிங் உளவு பார்த்த விவகாரத்தில் சீன பிரதமரிடம் கவலையை வெளிப்படுத்தினார்.
இந்திய தலைநகரில் நடைபெறும் G20 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், சீன பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது முறைசாரா கலந்துரையாடலில் சீன பிரதமர் லீ கியாங்கிடம் பேசினார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
Twitter
நாடாளுமன்ற ஆய்வாளர் ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இடையில், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பில் ரிஷி சுனக் தனது கவலைகளை சீன பிரதமரிடம் தெரிவித்தார். செய்தித் தொடர்பாளர் இதனை கூறியுள்ளார்.
பெய்ஜிங்கிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில், மார்ச் 13ஆம் திகதி அன்று பிரித்தானியர் மற்றொரு நபருடன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என Sunday Times வெளிப்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |